ராமநாதபுரம் சிவா சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பம்மனேந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் மூதாட்டி முத்துவேல்(70) நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலை பெய்த மழையில் மூதாட்டி வசித்து வந்த மண் வீடு இன்று காலை இடிந்து அவர் மீது விழுந்ததது. அருகில் யாரும் இல்லாததால் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார். இன்று காலை மூதாட்டியை காணாமல் உறவினர்கள் இடிந்த வீட்டிற்குள் தேடிய போது மூதாட்டி முத்துவேல் இறந்த நிலையில் மீட்க பட்டார். இதுகுறித்து கமுதி வருவாய்த்துறை மற்றும் கமுதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story



