மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய டிஎஸ்பி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சென்னகரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 116 ஆம் ஆண்டு விழா 4 ந்தேதி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மேலூர் உட்கோட்டம் காவல் துணைக்கண்காணிப்பாளர் சிவக்குமார் கலந்து கொண்டார். மேலூர் டிஎஸ்பி சிவக்குமார் 70 வயதுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களுக்கும், தற்போது பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தம்மாள், உதவி தலைமை ஆசிரியர் திலகவதி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு, பள்ளி மாணவ, மாணவிகள், முன்னாள் மாணவர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். பள்ளி மாணவர்கள் 100 பேருக்கும், ஆசிரியர்களுக்கும், முன்னாள் ஆசிரியர்களுக்கும் நினைவுப்பரிசு மற்றும் டிபன்பாக்ஸ்களும் வழங்கப்பட்டன. கிராமப்பொதுமக்கள் அனைவருக்கும் இரவு உணவும் வழங்கப்பட்டது.
Next Story





