கோடை கால நீர் மோர் பந்தலை தொடங்கிய திமுகவினர்

மதுரை திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே இன்று நீர் மோர் பந்தலை திமுகவினர் தொடங்கினார்கள்.
மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பாக திருமங்கலம் பேருந்து நிலையத்தில் கோடை வெப்பத்திலிருந்து மக்களைக் காக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கோடைகால நீர் மோர் பந்தலை இன்று (ஏப்.5) மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் மற்றும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் இணைந்து திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழம், வெள்ளரிப்பிஞ்சு, இளநீர், நுங்கு, பதநீர் மற்றும் சர்பத் ஆகியவற்றை வழங்கினார்கள். உடன் தெற்கு மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story