ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் டிரைவர் பைக் மாயம்

ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் டிரைவர் பைக் மாயம்
X
புதுக்கடை
புதுக்கடை அருகே வெள்ளையம்பலம் பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் டிரைவராக தாழக்குடி பகுதியை சேர்ந்த மதன் (26) என்பவர் பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் தனது இரு சக்கர வாகனத்தில் ஆஸ்பத்திரியில் பணிக்கு வந்தார். பின்னர் பைக்கை ஆஸ்பத்திரி அருகில் நிறுத்திவிட்டு, பணிக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது அவரது பைக் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.  இது குறித்து மதன் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story