இந்து முன்னணியினர் திடீர் ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணியினர் திடீர் ஆர்ப்பாட்டம்
X
அருமனை
அருமனை அருகே புண்ணியம் சந்திப்பு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது அங்கு பேசிய ஒரு நபர் இந்து மத கடவுள்களை அவதூறு பேசியதாக புகார் எழுந்து அன்று பிரச்சனை ஏற்பட்டது.      இதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று மாலை இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் செல்வன் தலைமை வகித்தார்.        கூட்டத்தில் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசிய கேரளா எழுத்தாளரை கண்டித்தும், இதற்காக போராட்ட நடத்திய இந்து இயக்கத்தினர் மீது தாக்கல் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.       இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து  முன்னணியினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story