ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

X
திண்டுக்கல் இரயில் நிலையத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அரசியல் ஆதாயத்திற்காக போட்ட வழக்குகள் என்றும் வெற்றி பெற்றதில்லை என்று அமைச்சர் ஐ.பெரியசாமி திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அரசியல் ஆதாயத்திற்காக போடப்பட்ட வழக்குகள் என்றும் வெற்றி பெற்றதில்லை என்பதை நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பு மூலம் எனக்கு கிடைத்துள்ளது என்றார். நிகழ்ச்சியின்போது திண்டுக்கல் கிழக்குமாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, துணைச் செயலாளர்கள் ஆ.நாகராஜன், மார்கிரேட்மேரி, பிலால் உசேன், பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட திமுக பொருளாளர் சாணார்பட்டி விஜயன் உட்பட திமுக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story

