மாநில அளவிலான தேர்வு செஸ் போட்டி

X
திண்டுக்கல் ரோட்டரி ஹாலில் திண்டுக்கல் மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் செஸ் போட்டிகள் நடைபெற்றது வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை விருதுநகரில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கான தேர்வுகள் இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட உள்ளனர். ஏழு வயது முதல் 70 வயது வரை அனைவரும் இந்த போட்டியில் பங்கு பெறுகிறார்கள். ஏழு சுற்றுகளாக போட்டிகள் நடைபெறுகின்றன. திண்டுக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து 154 பேர் போட்டிகளில் பங்கேற்றனர். இன்று நடைபெறும் போட்டியில் முதல் பரிசு பெறுபவருக்கு ரூபாய் 1500 இரண்டாம் பரிசாக ரூபாய் 1250 3ஆம் பரிசாக ரூபாய் 1000 நான்காம் பரிசாக ரூபாய்750, 5 முதல் 10 பரிசுகளாக ரூபாய் 300 ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கான சிறப்பு போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 700 இரண்டாம் பரிசாக ரூபாய் 500 மூன்றாம் பரிசாக ரூபாய் 300 ரொக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஓபன் போட்டியில் ஆண், பெண், வயது என பிரிவுகள் இல்லாமல் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும் வகையில் போட்டிகள் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருந்தன. மாவட்ட சதுரங்க கழக தலைவர் ஜி.சுந்தர்ராஜன், செயலாளர் அப்துல் நாசர், பொருளாளர் நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் போட்டிகளை ஏற்பாடு செய்தனர்.
Next Story

