மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் முகாம்

X
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் திண்டுக்கல் மின் பகிர்மான வட்டம் நடத்தும் மின்வாரிய சிறப்பு குறை தீர்ப்பு முகாம் பொன்னகரம் துணை மின் நிலைய வளாகத்தில் திண்டுக்கல் மேற்பார்வை பொறியாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மின் கட்டணம், மின் மீட்டர், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பம் மாற்றுதல் உள்ளிட்ட புகார்களை பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த முகாம் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் தெற்கு செயற்பொறியாளர் சாந்தி, திண்டுக்கல் சின்னாளப்பட்டி வடமதுரை நத்தம் தெற்கு உதவி செயற்பொறியாளர்கள் மணிகண்டன், சீனிவாசன், மகேஸ்வரி, புன்னிய ராகவன் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
Next Story

