ப.கொந்தகை அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

X
நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த ப.கொந்தகையில் உள்ள, மதாரியா அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளியின் முகவர் ஹாஜா மன்சூர் அல்ஹாஜ் தலைமை பேசலாமா வகித்தார். பள்ளியின் செயலர் ஷாகுல் ஹமீது, தாரிக் மதார்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் நடராஜன் வரவேற்றார். ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், வட்டார கல்வி அலுவலர்கள் ரவி, ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். விழாவில், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் அப்துல் ரஷீது, ராமமூர்த்தி, விமலா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும், ஆசிரியர்கள் சாந்தி, கோமதி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில், ஆசிரியர் அமுதா நன்றி கூறினார்.
Next Story

