மாலை போடுவது பட்டாசு வெடிப்பது என்பது ஆபத்தான விஷயம் : அமைச்சர்
திருவள்ளூர் தமிழகம் ஒடுக்கப்பட்டு வருகிறது மிக விரைவில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட இருக்கிறது மகாராஷ்டிரா பீகார் குஜராத் மாநிலங்கள் தங்கள் மாநில மொழியை இழந்துள்ளது மொழியை அழித்தால் ஒரு இனத்தை அழித்து விடலாம் என மத்திய அரசு நினைக்கிறது பேருந்தில் பெண்களுக்கு பயணம் இலவசம் 7,100 கோடி வரை ஆண்டுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சாமு நாசர் பொதுக் கூட்டத்தில் பேசுகையில் தெரிவித்தார் மாலை போடுவது பட்டாசு வெடிப்பது என்பது ஆபத்தான விஷயம் அதையெல்லாம் பொதுக் கூட்டத்தில் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் சாமு நாசர் தெரிவித்தார் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏனம் பாக்கம் ஊராட்சியில் பொதுக்கூட்டம் மாவட்ட கழக பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக கொள்கை பரப்புச் செயலாளர் புதுக்கோட்டை விஜயா சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சாமு நாசர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர் பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சாமு நாசர் பொது கூட்டத்தில் பட்டாசு வெடிக்காதீர்கள் மாலை போடுவது பட்டாசு வெடிப்பது என்பது ஆபத்தான விஷயம் அதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என கூறினார் அவர் பேசிக் கொண்டிருந்தபோது தொடர்ந்து பட்டாசு வெடித்ததால் பேச்சை திடீரென நிறுத்தி கட்சியினருக்கு அறிவுறுத்தினார் அப்போது நாய்கள் குறைத்து சண்டை போட்டுக் கொண்டு சத்தமிட்டதால் பற்றாக்குறைக்கு இதுவும் வந்துவிட்டது என தெரிவித்தும் அவருக்கு கட்சியினர் மாலை அணிவித்த போது மாலையை ஏற்க மறுத்து அதை திருப்பி அவர்களுக்கு போட்டு மேடையிலேயே சிரிப்பலையை ஏற்படுத்தினார் மற்றவர்கள் பிறந்த நாளை சுயநலத்திற்காக கொண்டாடுகிறார்கள் தன்னை காத்துக் கொள்ளவும் பதவிகள் பெறவும் செய்கிறார்கள். ஆனால் முதல்வர் பிறந்த நாள் மக்கள் நலன் சார்ந்த அடிப்படையில் நடைபெற வேண்டும் என உத்தரவு போட்டு பிறந்தநாள் கொண்டாடப்படுவதாகவும் முதல்வர் வாழ்ந்தால் தான் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஒரு பாதுகாப்பு என்றும் மொழி மதம் இனத்தால் பிரிக்கப்பட்டுள்ளோம் மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது சேரவேண்டிய பணத்தை வழங்காமல் உள்ள அரசாங்கமாக மோடி அரசு உள்ளது என்றும் தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்கு 8 லட்சம் வரை வாங்கி கொள்ளையடிக்கிறார்கள் என்றும் தமிழகம் ஒடுக்கப்பட்டு வருகிறது மிக விரைவில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட இருக்கிறது மகாராஷ்டிரா பீகார் குஜராத் மாநிலங்கள் தங்கள் மாநில மொழியை இழந்துள்ளது மொழியை அழித்தால் ஒரு இனத்தை அழித்து விடலாம் என மத்திய அரசு நினைக்கிறது என்றும் தமிழகத்தின் பாதுகாப்பாக முதல் ஸ்டாலின் உள்ளார் என்றும் பேருந்தில் பெண்களுக்கு பயணம் இலவசம் 7,100 கோடி வரை ஆண்டுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது அதனால் தான் விடியல் பயணம் என முதல்வர் பெயர் வைத்தார் வரிப்பணத்தை கொடுக்க முடியாமல் இருக்கிறார் மோடி அவர்களின் அப்பன் வீட்டு பணத்தைக் கேட்கவில்லை எங்கள் வரிப்பணத்தை கொடுங்கள் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய 2 ஆயிரம் கோடி வழங்குங்கள் 100 நாள் பணி ஊதியம் வழங்க பணம் வழங்குங்கள் பாஜக ஆளும் மாநிலங்கள் பாஜகவிற்கு ஜால்ரா அடிக்கும் மாநிலமான ஆந்திரா பீகர் மாநிலங்களுக்கு பணத்தை கொடுக்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார்
Next Story




