நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம்

X
முத்தூர் அருகே சூரிய நாராயணவலசு கிராமத்தில் விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கோவை தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு இளநிலை வேளாண்மை கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு நிலக்கடலை சாகுபடி தொழில் நுட்பங்கள், எந்திர உழவு பணி மேற்கொள்ளும் வழிமுறைகள், நீர் சிக்கனம் பயன்பாடு மேலாண்மை, உரம் மேலாண்மை, பயிர் பாதுகாப்பு மேலாண்மை, களை மேலாண்மை, அறுவடை பணிகள், கூடுதல் மகசூல் பெறும் வழிமுறைகள் ஆகியவை பற்றி சுற்றுவட்டார விவசாயிகள் அனைவருக்கும் விளக்கி கூறினார்கள். முகாம் நிறைவாக நிலக்கடலை சாகுபடியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக்கழக வல்லுநர்களால் அங்கீகரிக்கப்பட்ட கிரவுண்ட் நட்ரிச் என்னும் பயிர் பூஸ்டர் பயன்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. முடிவில் நிலக்கடலை சாகுபடியில் தொழில்நுட்ப விழிப்புணர்வு கையேடு விவசாயிகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
Next Story

