ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா!

X

ஒடுகத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் ஆண்டு விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் நகர செயலாளர் பெருமாள்ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story