கோவை: கோவையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு !
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவைக்கு நேற்று வருகை தந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் அவருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் திரண்டிருந்த கழக தொண்டர்கள் முதலமைச்சருக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர். முதலமைச்சருடன் அமைச்சர் செந்தில்பாலாஜி உடன் வந்திருந்தார். விமான நிலைய வளாகம் முழுவதும் தொண்டர்களின் ஆரவாரத்தாலும், மேளதாளங்களின் ஒலியாலும் களைகட்டியிருந்தது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, வெள்ளக்கோவில் சாமிநாதன், கழக துணைப்பொதுச் செயலாளர்கள் ராசா எம்பி, அந்தியூர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய அமைச்சர் கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணைமேயர் வெற்றிச்செல்வன், காவல் ஆணையாளர் சரவணசுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கணபதி ராஜ்குமார் எம்பி, ஈஸ்வரசாமி எம்பி, திருப்பூர் மேயர், எம்எல்ஏ செல்வராஜ், திருப்பூர் மாவட்ட செயலாளர் பத்மநாபன், முன்னாள் எம்பி நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு முதலமைச்சரை வரவேற்றனர். முதலமைச்சர் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






