தேன்கனிக்கோட்டை: விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளமரகட்டா பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது மகள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டு தனது டூ வீலரில் சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, மரகட்டா வனப்பகுதியில் சென்றபோது சாலை ஓரத்தில் அவரது டூவீலர் மோதி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நாகராஜை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

