ஜெனக நாராயண கோவிலில் திருக்கல்யாணம்.

X
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவ திருக்கல்யாணம் நேற்று ( ஏப்.5) நடைபெற்றது. இந்நிகழ்வில் சுவாமி, தேவியர்களுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்ற பின்னர் பூதேவி, ஸ்ரீதேவியர், நாராயண பெருமாள் சப்பரங்களில் ரத வீதியில் உலா வந்து கோயில் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். வேத மந்திரம் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அலங்கார வண்ண ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

