குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
X
அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தொட்ட படியும் ஐந்தருவில் 5 கிளைகளில் ஆர்ப்பரித்து கொட்டியும், பழைய குற்றால அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய காட்டாற்று வெள்ளம் நடைபாதை வரையில் கரைபுரண்டு ஓடியது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை முதல் மழைப்பொழிவு குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.
Next Story