கோவை: கோலாகலமாக நடைபெற்ற விளையாட்டு விழா!

X
கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் KUDOS-2K25 என்ற தலைப்பில் நேற்று பிரமாண்ட விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ICF பயிற்சி அலுவலரும், இந்திய ரயில்வேயின் வாலிபால் வீரருமான திரு. G. ஜெயசங்கர் மற்றும் தேசிய கால்பந்தாட்ட வீராங்கனை செல்வி N. சௌமியா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினர். ஜெயசங்கர் தனது உரையில், மாணவ மாணவியர்கள் உடல் மற்றும் மன வலிமையைப் பெற விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். விளையாட்டு வீரர்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம், சிந்தனை மற்றும் வாய்ப்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களைப் பற்றி அவர் எடுத்துரைத்தார். மேலும், படிப்பு அறிவை வளர்ப்பது போல, விளையாட்டு உடலைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள், குறிப்பாக இந்திய ரயில்வேயில் அதிக அளவில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய கால்பந்தாட்ட வீராங்கனை சௌமியா பேசுகையில், பெண்கள் தங்களது விளையாட்டுத் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். கிரிக்கெட்டைப் போலவே கால்பந்திலும் பெண்கள் சாதிக்க ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Next Story

