ஸ்ரீராம ரத யாத்திரைக்கு உற்சாக வரவேற்பு

X
ஸ்ரீராம ரத யாத்திரை வரவேற்பு ராமநவமியை முன்னிட்டு கோவை ஆஞ்சநேய ஆசிரமத்தின் நாலாவது ஆண்டு ஸ்ரீராம ரத யாத்திரை கூடலூரில் துவங்கி பல மாவட்டங்களை சுற்றி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் வந்தடைந்தது. இங்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அகில பாரத சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் தொழிலதிபர் காமராஜ், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநகர தலைவர் நாஞ்சில்ராஜா, பொதுச் செயலாளர் கார்கில் மணிகண்டன், மாவட்ட இணை செயலாளர் விஜு ராம் தர்ம பிரசார், தக்கலை பொறுப்பாளர் சலிந்திரன் மற்றும் ஏராளமான கலந்து கொண்டார்கள். இந்த ஸ்ரீராம ரத யாத்திரை இன்று 6-ம் தேதி காலை கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு காலை 11 மணி அளவில் சுசீந்திரம் அங்கிருந்து கோட்டாறு வழியாக வடசேரி வந்து சேரும் அங்கிருந்து கிருஷ்ணன் கோவில் ரத வீதியில் சென்றடையும். பின்பு அங்கிருந்து தக்கலை சென்று அவ்வழியாக கேரளா சென்று ரத யாத்திரை தொடர்ந்து கேரளா வழியாக பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story

