சுசீந்திரம் அருகே வீட்டில் கட்டிய ஆடு திருட்டு

சுசீந்திரம் அருகே வீட்டில் கட்டிய ஆடு திருட்டு
X
சிசிடிவியில் 2 பேர் உருவம் சிக்கியது
சுசீந்திரம் அருகே உள்ள அக்கரை பகுதியை சேர்ந்தவர் பால்துரை (75). இவர் தனது கசாப்பு (கறி) கடைக்காக ரூ. 8 ஆயிரம்  மதிப்பிலான ஆடு ஒன்றை  விலைக்கு வாங்கி வீட்டின் பின்புறம் கட்டி இருந்தார். அதனை சம்பவத்தன்று யாரோ திருடி சென்று விட்டனர்.       இது தொடர்பாக அந்தப் பகுதியில் உள்ள சி.சி .டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, 2 பேர் ஆட்டை திருடிக் கொண்டு செல்வது தெரியவந்தது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் பால்துரை புகார் செய்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story