கோலப்பொடியில் ஊராட்சிகளின் வரைபடம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் அசத்தல்

X
அரியலூர், ஏப்.6- அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில், தந்தை ரோவர் வேளாண் இறுதியாண்டு கல்லூரி மாணவிகள் அவர்களின் ஊரக வேளாண் பணி அனுபவம் தொடர்பான "பங்கேற்பு கிராமப்புற மதிப்பீட்டை" திருமானூர் ஊராட்சிய ஒன்றியம் அலுவலகத்தில் நிகழ்த்தினர். திருமானூர் ஒன்றியம் பற்றிய வரைப்படத்தை கோலப்பொடியில் இட்டு வரைந்தனர். இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் பொய்யாமொழி மற்றும் விவசாய பெருமக்கள் பார்வையிட்டனர். இதில் வெண் வரைபடம், பை விளக்கப்படம் , வள வரைபடம், சமூக வரைபடம், கிராம வரைபடம் போன்றவை வரையப்பட்டன. இக்கிராமத்தில் உள்ள வளங்கள் மற்றும் இங்கு விளைவிக்கும் பயிர்கள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பயிர்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை எவ்வாறு கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. இதனை பார்வையிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மாணவிகளை பாராட்டினார்.
Next Story

