மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

X
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மைக்கேல்புரத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் முத்துவேல், 35. மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். புளோரிங் வேலை செய்தபோது எதிர்பாராத விதமாக மின் ஒயரில் சிக்கி சம்பவ இடத்திலே இறந்தார்.முத்துவேலின் உறவினர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப விடாமல் தடுத்து, ஒப்பந்ததாரர் மற்றும் ஆலையின் நிர்வாகிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா, வட பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story

