தொழுநோய் சிகிச்சை மையத்தில் ஆய்வு

தொழுநோய் சிகிச்சை மையத்தில் ஆய்வு
X
ஆய்வு
அரகண்டநல்லூரில் அரசு தொழுநோய் சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் உள்ளது. தற்போது பழைய கட்டடத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு விழுப்புரம் மருத்துவ நலப்பணிகள் மாவட்ட இணை இயக்குனர் ரமேஷ்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.அவர், நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, பழமையான கட்டடங்களை புதுப்பித்தல், ஆய்வக பரிசோதனை உபகரணங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தல் மற்றும் சிறப்பு முகாம் நடத்தி தொழுநோய் மற்றும் தோல் நோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஊழியர்களை அறிவுறுத்தினார். ஆய்வின் போது டாக்டர் முனிவேல், உதவியாளர் அற்புதராஜ் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடன் இருந்தனர்.
Next Story