அரக்கோணத்தில் போதை மாத்திரை கடத்திய இளைஞர்கள் கைது!

X
அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்க போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல்.4) இரவு ரயில் நிலையப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகம் படும்படியாக நின்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் பையில் 1087 போதை மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்து ஆற்காடு ஜெய்கணேஷ்(21), ராணிப்பேட்டை ஹரிஷ் குமார் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Next Story

