வகுப்பறை என்பது  நேயத்தையும், ஒழுக்கத்தையும், பேச்சாற்றலையும் வளர்க்கக்க கூடியதாக இருக்க வேண்டும்  பள்ளியில்  சார்பு நீதிபதி பேச்சு

வகுப்பறை என்பது  நேயத்தையும், ஒழுக்கத்தையும், பேச்சாற்றலையும் வளர்க்கக்க கூடியதாக இருக்க வேண்டும்  பள்ளியில்  சார்பு நீதிபதி பேச்சு
X
வகுப்பறை என்பது  நேயத்தையும், ஒழுக்கத்தையும், பேச்சாற்றலையும் வளர்க்கக்க கூடியதாக இருக்க வேண்டும்  பள்ளியில்  சார்பு நீதிபதி பேசினார்.
அரியலூர், ஏப்.6- தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின் படியும்  தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி திருமதி மலர் வாலன்டிணா  ஆலோசனைப்படி  நேற்று மாலை  அணைக்குடம்  ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது. ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும்  சார்பு நீதிபதியும் ஆகிய முனைவர் லதா  தலைமை வகித்தார். முகாமில் வழக்கறிஞர் மாசிலாமணி கலந்து கொண்டு வட்ட சட்டப்பணிகள் குழுவின் பயன்பாடுகள் பற்றி விளக்கினார். மேலும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் குழந்தைகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .முகாமில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி தலைமை ஏற்று பேசிய போது- தாயின் கருவறையில் பத்து மாதங்களும் பள்ளி வகுப்பறையில் பத்து வருடங்களும் ஒரு குழந்தையின் சிறப்பான வாழ்வை தீர்மானிக்கிறது. மலர்ந்தும் மலராத விழித்தும் கண் விழிக்காத குழந்தைகளை அதிகாலையில் விரைவாக பள்ளிக்கு  தயார் படுத்தி அனுப்பும்  பெற்றோர்கள் தான் , அந்த குழந்தைகள் இந்த உலகில் பிறந்ததன் பொருளையும், வாழ்வை அர்த்தப்படுத்துவதற்கான செயல்பாடுகளையும் பிஞ்சு குழந்தைகளின் மனதில் விதைக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் சூழலில் அறிவியல் கண்டுபிடிப்பின் உச்சமான கையிடை பேசி மனித மனங்களில் இருக்கும் வக்கிரங்களை வெளிப்படுத்தும் கருவியாக கேடயமாக மாறி வருவதால் குழந்தைகளுக்கு அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பழக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் அதற்கு பழக வேண்டும் என்றும் கூறினார். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு சட்டப் பாதுகாப்பு இருப்பதால் தாமதம் இன்றி புகார் கொடுத்து உடனடியான நடவடிக்கை எடுக்க இந்தசமூகம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நல்ல ஒழுக்கங்களையும் மனித நேயத்தையும் கற்றுக் கொள்ளும் இடமாக குடும்பமும் பள்ளியும் இருக்க வேண்டும் குழந்தைகள் நன் மனிதர்களாக எதிர்கால சமூகத்தின் தலைவர்களாக  உருவெடுக்க நல் பொறுப்புடன் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் செயல்பட வேண்டும் என்று கூறினார். மறுக்கப்பட்ட உரிமைகளுக்கு எதிராக அறிவாயுதம் கொண்டு நமக்கான அரசியலமைப்புச் சட்டத்தை  வகுத்துத் தந்த டாக்டர்  அம்பேத்கரைப் போல்  அறிவால் இவ்வுலகை வெல்ல வேண்டும் புரட்டும்  புத்தகங்கள் எல்லாம் நல்ல புத்தகங்கள் அல்ல எந்த புத்தகம் உன்னை புரட்டிப்  போடுகிறதோ அதுதான் நல்ல புத்தகம். புத்தகங்களை தேர்ந்தெடுக்க குழந்தைகளை பழக்க வேண்டும் . வகுப்பறை என்பது  நேயத்தையும், ஒழுக்கத்தையும், பேச்சாற்றலையும் வளர்க்கக்க கூடியதாக இருக்க வேண்டும் . குழந்தைகள் அனைவரும் ஜெயிக்க  பிறந்தவர்கள் என்பதையும் , பெரும் தலைவர் ஆவார்கள் என்பதையும் நாம் நம்பி அவர்களை வழி நடத்துபவர்களாக பெற்றோர்கள் இருக்க வேண்டுமே தவிர ஆதிக்கம் செலுத்துபவர்கள் ஆகவும் , அதிகாரம் செலுத்துபவர்களாகவும் இருக்கக்கூடாது.   குழந்தைகளை சரியாக வழி நடத்தினால் அவர்கள் நாளைய தலைவர்கள் ஆவார்கள் என்று கூறினார்.ஆசிரியர் கலைச் செல்வி வரவேற்றார்.ஆசிரியர் விஜயா நன்றி கூறினார்.
Next Story