ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி சொத்துக்களை வாங்கிய நகராட்சி மேலாளர் பணி ஓய்வு நிறுத்தி வைப்பு..*

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி சொத்துக்களை வாங்கிய நகராட்சி மேலாளர் பணி ஓய்வு நிறுத்தி வைப்பு..*
X
ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி சொத்துக்களை வாங்கிய நகராட்சி மேலாளர் பணி ஓய்வு நிறுத்தி வைப்பு..*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி சொத்துக்களை வாங்கிய நகராட்சி மேலாளர் பணி ஓய்வு நிறுத்தி வைப்பு.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் சீ.பாபு இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பல ஆண்டுகளாக மேலாளராகவும், பொறுப்பு ஆணையாளராகவும் பணியாற்றி வந்தார். தற்ப்போது பெரம்பலூர் நகராட்சியில் கணக்கராக பணியாற்றி வரும்நிலையில் இவர் மீது வருமானத்திற்க்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கியதாக கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றுள்ளன. இதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் அதிக சொத்துக்கள் சேர்ந்ததற்க்கான குற்றச்சாட்டுக்கள் நிருபணம் ஆகாத நிலையில் அரசு அனுமதியின்றி சொத்துக்கள் வாங்கியது தெரியவந்தது தற்ப்போது பெரம்பலூர் நகராட்சியில் கணக்கராக பணியாற்றி வந்த நிலையில் மார்ச் 31ம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில் இவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பரிந்துரை செய்தனர் இதன் தொடர்ச்சியாக மார்ச் 31ம் தேதி,சீ.பாபு பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அதனை நிறுத்தி வைத்து நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு உத்தரவிட்டார் பாபு அவர்களுக்கு சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் ஊர் மக்களிடையே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வேலை பார்த்து அதிகப்படியான சொத்துக்கள் வாங்கியதால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம் பாபுவிற்கு பணி ஓய்வு நன்னடத்தை சான்றிதழ் வழங்க மறுத்ததாகவும் வருமானத்திற்கு அதிகமாக சுற்றுச் சேர்த்ததால் லஞ்ச ஒழிப்பு துறையினர் சொத்துக்களின் அளவீடுகள் குறித்து ஆய்வு செய்ய விரைவில் வருவார்கள் என நகராட்சி அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
Next Story