தாளவாடி பொதுமக்கள் மனு

X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு நாளை முதல் வரும் 8-ந் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தாளவாடி, கர்நாடக பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் டி ஜி புதூர், கடம்பூர், கேர்மாளம் வழியாக செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் தாளவாடி மக்கள் தாளவாடி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- பண்ணாரி கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு, பண்ணாரி, திம்பம், ஆசனூர் வழியாக மைசூர் செல்லும் வாகனங்களும், ஆசனூர், திம்பம், பண்ணாரி வழியாக கோவை, மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கடம்பூர் கேர்மாளம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழியானது முற்றிலும் ஒரு வழிப்பாதை, வனப்பகுதி சாலை ஆகும். எதிரே வாகனங்கள் வந்தால் வழிவிட முடியாது. மாவட்ட நிர்வாகம் முந்தைய ஆண்டுகளில் அனுமதித்த பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும். மேலும் இந்த மாற்றத்தால் தாளவாடி விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்படும். எனவே தாளவாடி பகுதி விவசாயிகளை தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.முன்பு சத்தியமங்கலத்தில் இருந்து ஆசனூர், மைசூர் செல்லும் வாகனங்கள் பண்ணாரி வழியாகவும், மைசூர் ஆசனூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பவானிசாகர் வழியாக சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் செல்லும். ஆனால் கடந்த ஆண்டு முதல் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்
Next Story

