கொல்லங்கோட்டி முதல்வர் விளையாட்டு மைதானம் 

கொல்லங்கோட்டி முதல்வர் விளையாட்டு மைதானம் 
X
கிள்ளியூர் எம் எல் ஏ பார்வை
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்பெறும் வகையில் 2025-2026 - ன்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை  மானியக் கோரிக்கை எண் : 49 - ல் முதலமைச்சர் சிறு விளையாட்டு மைதானம் அமைக்க ரூ.3 கோடி   நிதி ஒதுக்கீடு செய்து , துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.       கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட, கலிங்கராஜபுரம் பகுதியில் புல எண் : 451/2 -ல் 1 - ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் (பந்தடிகளம்) முதலமைச்சர் சிறு விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் அதிகாரிகளுடன் கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ்குமார் நேற்று  பார்வையிட்டார்.            நிழ்ச்சியில்   கொல்லங்கோடு நகராட்சி ஆணையர் இளவேந்தன், மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு உட்பட காங்கிரசார் பலர் கலந்து கொண்டனர்.
Next Story