துணை சுகாதார நிலையம் திறந்த எம்எல் ஏ

X
குமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பாங்காலை என்ற பகுதியில் துணை சுகாதார நிலையம் ஒன்று வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இதனை பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் திருவரம்பு பகுதியில் கட்டப்பட்ட படிப்பகத்தில் நிரந்தரமாக செயல்படும் வகையில் மாற்று ஏற்பாடு செய்ய ப்பட்டது. இதனை அடுத்து திருவட்டாறு பேரூராட்சி மன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு புதியதாக துணை சுகாதார நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை மனோ தங்கராஜ் எம் எல் ஏ திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ் தலைமை வகித்தார். பேரூர் அவைத் தலைவர் அந்தோணி முத்து, துணை செயலாளர் செல்வராஜ், சுகாதார துறை அலுவலர்கள், உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

