கரூரில், பிரதமர் மோடி வருகையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.
கரூரில், பிரதமர் மோடி வருகையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம். மத்திய அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் எதிர்த்து, கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கோகுல் தலைமையில் தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடியை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாநகர தலைவர் ஸ்டீபன் ராஜ், மாநகரத் தலைவர் வெங்கடேஷ், மாநகர பொருளாளர் கண்ணப்பன், அரவக்குறிச்சி பேரூராட்சி உறுப்பினர் பஷிலா பானு, புகலூர் நகர் மன்ற உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது கட்டாய ஹிந்தி திணிப்பு, புயல், வெள்ளம், பேரிடர் காலத்தில் தமிழகத்திற்கு நிவாரண நிதி ஒதுக்காதது, நீட் தேர்வு ரத்து செய்யாதது ,100 நாள் வேலை வாய்ப்பு பணியாளர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்காதது, மெட்ரோ கல்வி நிதி உள்பட தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 4,034- கோடி தராமல் தமிழகத்திற்கு வந்துள்ள பிரதமர் மோடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story





