திருப்பத்தூர் அருகே சாலையின் நடுவே மின் கம்பம்

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றாமல் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மற்றபள்ளி ஊராட்சியில் மற்றபள்ளியில் இருந்து மாம்பாக்கம் பகுதிக்கு செல்லும் முக்கிய சாலையாக திகழ்ந்து வருகின்றது அந்த தார் சாலைவழியாக பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் அந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அந்த சாலை மிகவும் குண்டும்ம் குழியுமாக இருந்தால் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.கோரிக்கையை ஏற்று அங்கு தார் சாலை அமைக்க 1 கோடி 70 லட்சம் மதிப்பீட்டில் 3 கிலோ மீட்டர் தூரம் புதிய தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது அந்த சாலை அமைக்கும் போது அங்குள்ள தனியார் பள்ளி அருகே உள்ள ஒரு மின் கம்பதை அங்கிருந்து அகற்றி வேறு இடத்தில் மாற்றாமல் மின் கம்பம் சாலை நடுவே உள்ளதை அப்படியே விட்டு அங்கு தார் சாலை அமைத்துள்ளனர். இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டி கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும் அச்சத்துடன் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளானர். இந்த மின் கம்பத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் மாற்றி அமைக்க ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மின் வாரியத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டு அதற்காக பணமும் செலுத்தியுள்ளனர்.ஆனால் மின்சார வாரியம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. விபத்துகளை தடுக்க சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது
Next Story

