புதிய பேருந்துகளை அமைச்சர் கீதாஜீவன் துவங்கி வைத்தார்

X
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி வேளாங்கண்ணி தூத்துக்குடி ஏரல் தூத்துக்குடி செபத்தையாபுரம் கோவில்பட்டி வெள்ளாலங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு நான்கு புதிய பேருந்து பேருந்துகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் நலன் கருதி பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து போக்குவரத்து கழகம் சார்பில் தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணி, தூத்துக்குடியில் இருந்து ஏரல், தூத்துக்குடியில் இருந்து செபத்தியாபுரம், கோவில்பட்டியில் இருந்து வெள்ளாளங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு நான்கு புதிய பேருந்துகளை துவங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு புதிய பேருந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் மாநகராட்சி மண்டல தலைவி கலைச்செல்வி தூத்துக்குடி புறநகர் போக்குவரத்து கழக கிளை மேலாளர் ரமேஷ் பாபு, தூத்துக்குடி நகர கிளை மேலாளர் கார்த்திக், பொது மேலாளர் பாலசுப்பிரமணியன், கோவில்பட்டி கிளை மேலாளர் ஜெகநாதன், மற்றும் திமுக ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
Next Story

