மாரத்தான் போட்டியின் பொழுது காவலன் செயலி அறிமுகம் செய்த திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த்

குமாரபாளையம் மாரத்தான் போட்டியின் பொழுது காவலன் செயலி அறிமுகம் செய்த திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜே.கே.கே. நடராஜா கல்லூரி சார்பில் நடந்த மாராத்தான் போட்டியில், போலீசார் சார்பில் காவலன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. தாளாளர் செந்தாமரை நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் பங்கேற்று இருந்தார், அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த குமாரபாளையம் பெண் காவலர் சத்யா காவலன் செயலி குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் இடம் விளக்கம் அளித்து தாங்கள் காவல் துறையில் அறிமுகப்படுத்தி உள்ள காவலன் செயலியை பிடித்து மாணவி மாணவர்களுக்கு விழிப்பு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது அதற்கு இசைந்து காவலர் செயலி குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்து அறிமுகம் செய்தார் அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த 500க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் காவலர் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டனர் ட்ராவலர் சத்யாவின் சமயோகித முக்தியால் கல்லூரி மாணவ மாணவிகள் பள்ளி மாணவ மாணவர்கள் என அனைவரும் பயனடைந்தது குறிப்பிடத்தக்கது நடிகர் ஸ்ரீகாந்த் பேசியதாவது. பேசியதாவது: காவலன் செயலி, மாணவ, மாணவியருக்கு மிகவும் பயனுள்ளதாகும். இதனை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தனிமையில் செல்லும் போது, வம்புசெய்யும் நபர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள உதவியாக இருக்கும். தங்கள் வாகனம் திடீரென்று பழுதாகி நின்றாலும், இதனை பயன்படுத்தினால், தக்க உதவி கிடைக்கும் திடீரென்று மருத்துவ உதவி வேண்டும் என்றாலும் இந்த செயலி மூலம் ஆம்புலன்ஸ் வரவழைக்க முடியும். இதனை ஒவ்வொருவரும் தங்கள் உறவினர், நண்பர்களுக்கு அனுப்பி பதிவு கட்டாயம் பதிவு செய்ய வலியுறுத்துங்கள் என்று பேசினார்
Next Story