தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் பங்கேற்று இன்ப அதிர்ச்சி

தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் பங்கேற்று இன்ப அதிர்ச்சி
X
தா.பழூரில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தான் வருவதாக தகவல் ஏதும் தெரிவிக்காத நிலையில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் திடீரென கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அரியலூர், ஏப்.6- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தா.பழூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு செயலாளர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது அப்போது எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென மண்டபத்திற்குள் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் உள்ளே நுழைந்தார் அப்போது ஆசிரியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் வருவார் எனவும் அங்கிருந்து ஆசிரியர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை எனவே இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காகவே எந்த அறிவிப்பும் இல்லாமல் தங்களை சந்திக்க வேண்டும் ஆசிரியர்களை மாணவர்கள் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களை சந்தித்ததாக பேசி ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.தொடர்ந்து தாம் படித்த பள்ளி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து பேசினார்.சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது ஆசிரியர்களை கண்டால் அப்போதெல்லாம் மரியாதை கொடுக்கும் விதமாக சைக்கிளில் இருந்து இறங்கி சைக்கிளை தள்ளிக் கொண்டே சென்று ஆசிரியர் சென்ற பிறகு சைக்கிளில் ஏறி சென்றோம்.அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்கள் நல்ல பல கருத்துக்களை வழங்கியும் பாடங்கள் கற்பித்ததன் மூலம் சிறந்த மாணவர்களை உருவாக்கிய பெருமை ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் உண்டு,அந்த வகையில் ஆசிரியர் பணி மிகவும் சிறப்பான பணி அதனால் தாங்கள் என்னை சந்திக்க வருவதைவிட நானே தங்களை சந்திக்க வேண்டும் என்று இங்கு வந்தேன் என்று இவ்வாறு தெரிவித்தார்.
Next Story