அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
X
அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
அரியலூர்,ஏப்.6- கோடை காலம் தொடங்கியதையடுத்து, அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர் சிலை முன் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் நகரச் செயலர் ஏ.பி.செந்தில் தலைமை வகித்தார். முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும், அக்கட்சியின் மாவட்டச் செயலருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாநில அமைப்புச் செயலர் மகேந்திரன் கலந்து கொண்டு, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, இளநீர், வெள்ளரி மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். இதே போல் வி.கைகாட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலர் பொய்யூர் பாலு(எ)பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சிகளில், மாவட்ட அம்மா பேரவைச் செயலர் ஓ.பி. சங்கர், இணைச் செயலர் நா.பிரேம்குமார், வழக்குரைஞர் செல்ல.சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். :
Next Story