மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் முகாம்

X

மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.
அரியலூர், ஏப்.6- அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் வாரந்திர சிறப்பு குறைதீர் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச் தலைமை வகித்து, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து 33 கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர், அந்த மனுக்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். முகாமில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். :
Next Story