அரியலூரில் போட்டோ } ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

X
அரியலூர், ஏப்.6- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே போட்டோ}ஜியோ அமைப்பினர் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களையும் நிரப்பி, பதவி உயர்வு வழங்க வேண்டும் . மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் 12,527 ஊராட்சிகளில் பணிப்புரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் அ.கோபு, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ச.வேலுசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு அலுவலர் சங்க மாநில மகளிரணிச் செயலாளர் ஜெ.கல்பனாராய் கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர் இ.எழில் மற்றும் போட்டோ } ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். :
Next Story

