கவுண்டன்புதூரில் டூவீலரில் அழைத்துச் சென்ற மூதாட்டி கீழே விழுந்து விபத்து.
கவுண்டன்புதூரில் டூவீலரில் அழைத்துச் சென்ற மூதாட்டி கீழே விழுந்து விபத்து. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, வள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் வயது 38. இவரது உறவினர் கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா தென்னிலை அருகே பால்வார்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி தமிழரசி வயது 61. இவர்கள் இருவரும் ஏப்ரல் 2-ஆம் தேதி மதியம் 12.30 மணி அளவில் மின்னாம்பள்ளியில் இருந்து கவுண்டன் புதூர் செல்லும் சாலையில் அவர்களது டூவீலரில் சென்றனர். டூவீலரை சுரேஷ் ஓட்டி செல்ல தமிழரசி பின்னால் அமர்ந்து சென்றார். இவர்களது வாகனம் கவுண்டன்புதூர் பகுதியில் உள்ள சுப்பிரமணி என்பவர் வீட்டின் அருகே சென்ற போது, டூவீலரை வேகமாக இயக்கியதால், பின்னால் அமர்ந்து வந்த தமிழரசி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தமிழரசியை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தமிழரசி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.
Next Story




