நாட்டு மருதூர் அரசு உதவி பெறும் நடேசன் ஆரம்பப் பள்ளியில் சத்துணவு கூடம் திறப்பு விழா

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முத்துக்கண்ணு நினைவாக சத்துணவு கூடம் கட்டித் தந்த குடும்பத்தார்
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட மேட்டுமருதூரில் உள்ள அரசு உதவி பெறும் நடேசன் ஆரம்ப பள்ளியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை தெய்வத்திருமதி முத்துக்கண்ணு நினைவாக அவரது புதல்வன் டாக்டர் ராஜசேகரன் சத்துணவு கூடம் ஒன்றினை புதியதாக கட்டி பள்ளி மாணவ மாணவியர்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார். இந்த புதிய சத்துணவு கூடத்தினை குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். திருச்சி கி.ஆ.பெ.வி. அரசு மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் ராஜசேகரன் M.S., M.Ch., (Gastro) அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் குளித்தலை சிவராமன், குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, கரூர் மாவட்ட அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் மருதூர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்வில் குளித்தலை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் தியாகராஜன், நகர பொருளாளர் தமிழரசன், அயலக அணி அமைப்பாளர் அருண்மொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நினைவேந்தல் உரையினை கௌசிகா M.B.B.S., மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்கள் வாசித்தனர். இறுதியாக செல்வன் வெண்முகிலன் நன்றியுரை நல்கினார்.
Next Story