நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது பாரபட்சமான நடவடிக்கை காட்டுவதாக சட்டபேரவையில் எம்.எல்.எ சேகர் குற்றசாட்டு.

X
Paramathi Velur King 24x7 |6 April 2025 6:54 PM ISTநிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது பாரபட்சமான நடவடிக்கை சட்டபேரவையில் எம்.எல்.எ சேகர் குற்றசாட்டு.
பரமத்தி வேலூர்,ஏப்.6: தமிழக சட்டப்பேரவை யில் பரமத்தி வேலூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சேகர் பேசியதாவது: நிதிநிலை அறிக்கையில், பக்கம் 58ல் திரும்ப-திரும்ப நான் படித்துப் பார்த்தபோது, பொறியியல் வேளாண்மை பட்டப் படிப்பிற்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டில் நிதி ஒதுக்கி, பயனடைந்த மாணவர்களின் விவரங்க ளைத் தெரிவித்தது போல, இதற்கு வழிகாட்டியாக, எடப்பாடியார் மருத்துவ படிப்பிற்கு கொண்டு வந்த7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டில், அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரம் மற்றும் நிதி ஒதுக்கீடு போன்ற விவரங் கள் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படாதது இது பாரபட்சமான நடவடிக் கையாக பார்க்கப்படுகிறது. பொங்கல் திருநாளில் எடப்பாடியார் ஆட்சியின் போது, சுமார் இரண்டு கோடியளவிற்கு வேஷ்டி-சேலை கொடுக்கப்பட் டது. ஆனால், நீங்கள் ஆட்சிப்பொறுப்பு ஏற்ற பிறகு வேஷ்டி-சேலைகளைப் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்த தோடு மட்டுமல்லாமல், அதையும் சரியான காலத்தில் கொடுக்காமல், பயனாளி களை அலைக்கழித்து, பல மாதங்கள் கழித்துதான் வேட்டி-சேலைகளை வழங் கியுள்ளீர்கள். எனவே, வருகின்ற பொங்கலுக்கு பொங்கல் பரிசுக்குரிய தொகையை நீங்கள் அதிகப்படுத்தியும், பொங்கல் தொகுப்பினைக் கொடுக்கும்போதேகொள்கை விளக்கக்குறிப்பில் சொல்லியப்படி வேட்டி சேலைகளை குறித்த காலத்தில் பரிசுத்தொகையுடன் சேர்த்து கொடுத்திட வேண்டும். வாரா-வாரம், திங்கள் கிழமைகளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்க மனுக்கள் வாங்கப்படுகிறது. ஆனால், குறைகள் தீர்க்கப்படுகின்ற னவா என்றால் சந்தேகம். ஏன் என்றால், ஆட்சியர் அலுவலக வளாகங்களில், தீக்குளிக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது என்பதே உதாரணம். இடம் இல்லாத ஆதி திராவிடர்களுக்கு அரசே நிலம் எடுத்து அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் ஆதிதிராவிடர் மக்கள், தங்கள் சொந்த செலவில், தனியார் நிலங்களை விலைக்கு வாங்கி, அவர்களில் ஒருவர் பெயரில் கிரயம் செய்து, அவர்களாகவே, 40-50 நபர்க ளாக பிரித்துக்கொண்டு குடியிருப்பு ஏற்படுத்திக் கொண்டு கிட்டத்தட்ட 30, 40 ஆண்டுகளாக வசித்து கொண்டு வருகிறார்கள். இதனால், இரண்டு பிரச் சினைகளை அவர்கள் சந்திக்கின்றார்கள். ஒன்று, தற்போது கிரையம் செய்வது என்றால், வழிகாட்டு மதிப்பு அதிகமாக உள்ளதால், அதிக தொகை வருகின்றது. அத னால், ஏழை, எளிய மக்கள் கிரயம் செய்ய முடியவில்லை.மற்றொன்று, இவர்கள் பெயரில் கிரையம் இல் லாததால், பட்டா-சிட்டா ஏற்படவில்லை. ஆகவே, அரசாங்கத்திலிருந்து வீடு கட்டும் சலுகை இவர்களுக்கு கிடைப்பதில்லை. எங்களது தொகுதியிலேயே பல்வேறு இடங்களில் இம்மாதிரியான நிலைமை இருக்கிறது. சிறப்பு அரசாணை ஒன்றை வெளியிட்டு, குறைந்த கட்டணத்திலோ அல்லது இலவசமாகவோ தனி நபர் கள் பெயரில் பத்திரப் பதிவு செய்து கொடுக்க வேண்டும். ஆதிதிராவிடர் மக்களுக்கு பொதுவாகவே பல்வேறு இடங்களில் மயானத்தை சுற்றி ஆக்கிரமிப்புகளும், மயானத்திற்கு செல்வதற்கு பாதை பிரச்சனையும் இருக் கிறது. ஆகவே, இதனை சிறப்பு கவனமாக அரசு எடுத்து, சர்வே செய்து, கம்பி வேலி போட்டுக் கொடுக்க வேண்டும். நத்தம் புறம்போக்கை பொறுத்தவரை 1989-90 ஜி.ஓ. படி வீடு கட்டியிருப்பவர்க ளுக்கு பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் பத்திரம் பதிவு செய்து இருக்கிறார் கள். ஆனால், அவர்களுக்கு பட்டாவழங்கப்படவில்லை. இவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் அடுத்து, அதிகமாக மக்கள் தொகை உள்ள கிரா மங்களை பிரித்து, அதாவது 15 ஆயிரம், 25 ஆயிரம், 30 ஆயிரம் வரையுள்ள மக்கள் தொகை கொண்ட கிரா மங்களைப் பிரித்து, கிராம நிர்வாக அலுவலர்களின் பணி சுமையினைக் குறைப்பதற் காக புதிய கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்திட வேண்டும். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கு 20, 30 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களுக்கு சான்று எடுப்பவர்களுக்கு இப்போது இருக்கும் நடைமுறை காலம் அதிகமாகிறது. மிகவும் சிரமமாக உள்ளது. ஆகவே, இந்த அரசு இந்த சான்றுகளை பெற இப்போது உள்ள நடைமுறையினை எளிமைப்படுத்தி கொடுக்க வேண்டும். அரசாணை எண் 97 நாள் 21-2-2025-ன்படி அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி குடியிருக்கும் நபர்களுக்கு பட்டா வழங்க அரசு வழிவகை செய்துள்ளது. இதனை எளிமைப்படுத்த வேண்டும். அரசாணை பற்றி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி. தவறுகள் ஏதும் நடக்காமல் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு பட்டா வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதேபோல, நத்தம் புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி குடியிருக்கும் ஏழை மக்களுக்கு ஏற்கனவே கிராமப்புற பகுதிகளுக்கு வட்டாட்சியர் நிலையி லும் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி பகுதிகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் நிலையிலும் பட்டா வழங்க வழிவகை உள்ளது. ஆனால், தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து புறம்போக்கு நிலங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட குழுவிடம் ஒப் புதல் பெற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்வு செய்து, எளிமைப் வேண்டும் என பரமத்தி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சேகர் சட்டபேரவையில் பேசினார்.
Next Story
