கோடங்கிபட்டியில் இருசக்கர வாகன மோதி முதியவர் பலி

X
கோடங்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பராஜ் (65). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனம் சுப்புராஜ் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story

