அரியலூரில் ஜூன் மாதம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு கூட்டத்தில் முடிவு

அரியலூரில் ஜூன் மாதம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு கூட்டத்தில் முடிவு
X
அரியலூரில் ஜூன் மாதம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அரியலூர்,ஏப்.6- அரியலூரில் ஜூன் மாதம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு நடத்துவது என அக்கட்சியின்  மாவட்டக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அரியலூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி லுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட குழுக் கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:மாவட்டம் முழுவதும் ஏப்.20}க்குள் கிளை கூட்டங்களை நடத்தி முடிப்பது. ஒன்றிய மாநாடுகளை அரியலூரில் ஏப்.21, திருமானூரில் ஏப்.22, தா.பழுரில் ஏப்.29, ஜெயங்கொண்டம், ஆண்டிமடத்தில் மே.5 ஆம் தேதிகளில் நடத்துவது. ஜூன் மாதம் அரியலூரில் மாவட்ட மாநாட்டை 2 நாள்கள் நடத்துவது. மாநாட்டில், மாநிலச் செயலர் இரா.முத்தரசன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வை.சிவபுண்ணியம் ஆகியோரை பங்கேற்க வைப்பது.நாகப்பட்டினத்தில் நடைபெறும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30 ஆவது தேசிய மாநாட்டின் நிறைவு நாளான ஏப்.17 ஆம் தேதி நடைபெறும் பேரணி, பொதுக் கூட்டத்தில் திரளானோர் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனஇக்கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் சா.அபிமன்னன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான வை.சிவபுண்ணியம் பங்கேற்று, இன்றைய அரசியல் நிலை, மக்கள் கோரிக்கைகள் மீது தொடர் இயக்கங்கள், நடைபெற இருக்கும் கட்சி மாநாடுகள், மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லம் கட்டிட புனரமைப்பு நிதி ஆகியன குறித்து பேசினார்.கூட்டத்தில் மாவட்டச் செயலர் சொ.ராமநாதன், முன்னாள் மாவட்ட துணைச் செயலர் டி.தண்டபாணி, மாவட்டத் துணைச் செயலர் ப.கலியபெருமாள் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story