மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு பாமக வன்னியர்கள் பங்கேற்க அழைப்பு

மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு பாமக வன்னியர்கள் பங்கேற்க அழைப்பு
X
அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கான ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அரியலூர், ஏப்.6- பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் உத்தரவின் பேரில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனையின் பேரில் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டுக்காக அரியலூர் மாவட்ட பாமக, மற்றும் வன்னியர் சங்க ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் பாமக அரியலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மறவன் தலைமையில் நடைபெற்றது .கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் மாநாட்டிற்கு அதிகப்படியான வாகனங்களில் செல்ல வேண்டும்,அனைவரும் பாதுகாப்பாகவும் செல்ல வேண்டும், மாநாட்டிற்கு அனைத்து தரப்பு மக்களையும் மாநாட்டு சிறப்புகளை கூறி அழைத்து வரவேண்டும், பாமக முன்னாள் நகரச் செயலாளர் மாதவன் தேவா முன்னிலைய வகித்து பேசினார். முன்னதாக நகர செயலாளர் பரசுராமன் வரவேற்று பேசினார்.இதில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நகர மற்றும் கிளை நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நகரத் தலைவர் அழகுதுரை நன்றி கூறினார்.
Next Story