திருவாரூர் நகர் பகுதியில் மது கடைகள் மூடப்படும்..

X
திருவாரூர் மாவட்டத்தில் மிக பிரசித்தி பெற்ற தியாகராஜ கோவில் ஆழித்தேரோட்டம் உலகப் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும் ஆசியாவிலேயே மிகப்பெரிய பேராக திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் கருதப்படுகிறது. ஆயில்ய நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் ஆழி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி திருவாரூர் தியாகராஜர் ஆலய ஆழித்தேரோட்டமானது வெகு விமர்சையாக நடைபெற உள்ளதை ஒட்டி பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாத வகையிலும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் திருவாரூர் நகர் பகுதியில் இயங்கும் டாஸ்மார்க் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story

