காய்கறி விலை குறைவு

காய்கறி விலை குறைவு
X
ஈரோட்டில் கோயில் விசேஷங்கள் நிறைவு பெற்றதால் காய்கறி விலை வெகுவாக குறைந்தது.
ஈரோட்டில் கோயில் விசேஷங்கள் நிறைவு பெற்றதால் காய்கறி விலை வெகுவாக குறைந்தது. ஈரோடு மாநகரில் உள்ள பல்வேறு கோயில்களில் கடந்த வாரம் பல்வேறு விழாக்கள் நடைபெற்றது. இதனால் காய்கறிக்கான தேவை அதிகரித்தது. இதன் எதிரொலியாக காய்கள் விலை சற்று அதிகரித்தது. இந்நிலையில், மாநகரப் பகுதிகளில் கோயில் விழாக்கள் நிறைவுப் பெற்றதை அடுத்து, காய்கறிகள் விலை வெகுவாக குறைந்துள்ளது. ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டிற்கு நேற்று காய்கறி வாங்க வந்த மக்கள் விலை குறைவாக கிடைத்ததால் மகிழ்ச்சி தெரிவித்தனர். காய்கறிகள் விலை விபரம் (கிலோ) ரூ: கத்திரிக்காய்–30, வெண்டைக்காய்–40, பாவற்காய்–50, முள்ளங்கி–30, சொரக்காய்– 10, கேரட்–50, பீன்ஸ்–80 பீட்ரூட்–50, கொடை மிளகாய்–50, பச்சை மிளகாய்–30, உருளை கிழங்கு–30, முட்டை கோஸ்–20, பீர்க்கங்காய்–50, பட்டை அவரை–60, கருப்பு அவரை–80, இஞ்சி–50, முருங்கை காய்–30,புடலங்காய்–40, சின்ன, பெரிய வெங்காயம் தலா–40, தக்காளி–15.
Next Story