உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா

உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா
X
விழா
திருக்கோவிலுார், உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. நேற்று அதிகாலை மூலவர் விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நித்திய பூஜையும், சூரிய பிரபையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் வீதி உலா நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு வானமாமலை ஜீயர் மடத்தில், திருவாய்மொழி, சேவை சாற்றுமறை நடைபெற்றது. மாலையில் வசந்த மண்டபத்தில் ஊஞ்சல் சேவையும், இரவில் வெள்ளி அனுமந்த வாகனத்தில், வான வேடிக்கையுடன் வீதி உலாவும் நடந்தது.ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் தலைமையில் நடந்த விழாவில், கோவில் ஏஜென்ட் கிருஷ்ணன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தார்.
Next Story