மூன்று மாதத்திற்கு பிறகு கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி

நீர்வரத்து
தேனி மாவட்டம் குரங்கணி வணப் பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக சரிவர மழை பெய்யாத காரணத்தினால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்ட நிலையில் நேற்றைய முன் தினம் இரவு நேரங்களில் பெய்த பலத்த மழை காரணமாக நேற்று கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து துவங்கியது. இந்நிலையில் நேற்று இரவும் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் குரங்கணி கொட்டகுடி வடக்கு மலை பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக தற்போது நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நீர் வரத்தானது அணை பிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சி வழியாக தற்போது ஆர்ப்பரித்துக் கொண்டு செல்கிறது. அணைக்கட்டு ராஜவாய்க்கால் மூலம் போடி சுற்றியுள்ள ஏழு குளங்களுக்கு தற்போது அதிக அளவில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் போடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உபரி நீர் அணைக்கட்டு நீர்வீழ்ச்சி மூலம் வைகை அணைக்கு சென்று வருகிறது. மூன்று மாத காலமாக கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து இல்லாமல் காணப்பட்ட நிலையில் தற்போது இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story