ஈரோட்டிற்கு கடல் மீன்கள் வரத்து குறைவு

X
ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டிற்கு ராமேஸ்வரம், துாத்துக்குடி, நாகபட்டினம், காரைக்கால், கேரளாவில் இருந்து கடல் மீன்கள் கொண்டு வரப்படும். நேற்று 10 டன் மட்டுமே வந்தது. வழக்கை விட பாதியளவுக்கு மட்டுமே மீன் வந்தது.மீன்கள் விலை விபரம் கிலோ (ரூ) : கொடுவா–550, விள மீன்–500, சீலா–450, கிளி மீன்–550, மதன மீன்–450, டுயானா–600, முரள்–450, சால்மோன்–700, இறால்–700, ப்ளூ நண்டு–700, வஞ்சிரம்–1,200, சங்கரா–400, அயிலை–300, மத்தி–200.
Next Story

