பெரிய மாரியம்மன் கோயிலில் மறுபூஜை

பெரிய மாரியம்மன் கோயிலில் மறுபூஜை
X
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வகையறா திருக்கோவிலில் மறு பூஜை
ஈரோடு மாநகரில் பெரியமாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறாவை சேர்ந்த சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். கடந்த மாதம் 18ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. இதையடுத்து, 3 கோயில்களிலும் கடந்த மாதம் 22ம் தேதி இரவு கம்பங்கள் நடப்பட்டன. இதைத்தொடர்ந்து, ஈரோடு மாநகர் மற்றும் மாநகரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், விழா துவங்கியது முதல் தினமும் காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து 3 கோயில்களிலும் உள்ள கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டு சென்றனர்.கடந்த 1ம் தேதி காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் விழாவும், 2ம் தேதி சின்னமாரியம்மன் கோயில் தேரோட்டமும் நடைபெற்றது. விழாவின் இறுதி நிகழ்வான நேற்று முன்தினம்,  பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய மூன்று கோயில்களிலும் கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து, பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களில் மறுபூஜை நேற்று நடைபெற்றது. இதனையொட்டி, மூன்று கோயில்களிலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும், காப்பு கட்டி விரதம் இருந்த மூன்று கோயில்களின் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
Next Story