தஞ்சாவூரில் மே இறுதியில் காவிரி பாதுகாப்பு மாநாடு நலிவுற்ற விவசாயிகள் சங்கம் முடிவு

தஞ்சாவூரில் மே இறுதியில் காவிரி பாதுகாப்பு மாநாடு நலிவுற்ற விவசாயிகள் சங்கம் முடிவு
X
விவசாயிகள் சங்கம்
தஞ்சாவூரில் மே மாத இறுதியில் காவிரி பாதுகாப்பு மாநாடு நடத்துவது என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சாவூரில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காவிரி பாதுகாப்பு மாநில மாநாடு மே மாத இறுதியில் நடத்துவது, இதில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், திரைப்பட நடிகர் கார்த்தி உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் சங்கத் தலைவர்களை அழைப்பது, தில்லியில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் மற்றும் டிராக்டர், நகைக் கடன்களை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ். முகமது இப்ராஹிம் தலைமை வகித்தார். மாநிலச் செய்தி தொடர்பாளர் கோ. ஜீவானந்தம், மாவட்ட அவைத் தலைவர் சக்திவேல், மாவட்டத் துணைச் செயலர் சசிகுமார், மாவட்ட கொள்கை பரப்பு செயலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story