தங்குவதற்கு இடம் கொடுத்த நண்பருக்கு காத்திருந்த அதிர்ச்சி : செயின் பறிக்க முயன்றவர் கைது

X
தங்குவதற்கு இடம் கொடுத்த நண்பருக்கு காத்திருந்த அதிர்ச்சி : செயின் பறிக்க முயன்றவர் கைது மதுரவாயல் அருகே நண்பரின் மனைவியினுடைய கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அருகே மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த கணேஷ் (40) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பரான நேபாளத்தை சேர்ந்த கேசப் புல் என்பவர் கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி இரவு கணேஷ் உடன் ஒன்றாக அறையில் தங்கி இருந்துள்ளார். நான்காம் தேதி அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தபோது கணேசன் மனைவியினுடைய கழுத்தில் இருந்த செயினை கேசப் புல் பறிக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்து கணேஷ் சத்தம் போட்டதால் கேசப் அங்கிருந்து ஓடியுள்ளார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்தில் கணேஷ் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை செய்த போலீசார் கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து கொண்டிருந்த கேசப் புல்லை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story

